விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து துறை அரசு ஊழியர்கள் புதிய ஒய்வூதிய திட்டமான பங்களிப்பு ஒய்வூதிய முறையை முழுமையாக ரத்து செய்யக்கோரி சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கூறும்போது, “கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டமானது 2004ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தினால் யாருக்கும் எந்தவிதப் பலனுமில்லை” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சேலம் மத்திய சிறை கைதி திடீர் உயிரிழப்பு