ETV Bharat / state

பொருட்காட்சியில் மோதல்; ஆயுதமாய் மாறிய பீர் பாட்டில்! - murder

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொருட்காட்சிக்கு சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட இளைஞர்
author img

By

Published : Aug 1, 2019, 9:20 PM IST

Updated : Aug 1, 2019, 11:01 PM IST

தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு போடப்பட்டிருந்த பொருட்காட்சிக்கு நேற்று இரவு சென்ற ஆகாசம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்களுக்கும், மதுரையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட இளைஞர்

இதில் மதுரையைச் சேர்ந்த சிலர் ஆகாசம்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை பீர் பாட்டிலால் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராம்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். அதிகாலையில் தலையில் வலி ஏற்பட்டு மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Intro:விருதுநகர்
01-08-19

பொருட்காட்சியில் இரு தரப்பினரிடையே மோதல். பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்புBody:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொருட்காட்சிக்கு சென்ற இரு தரப்பினரிடையே மோதல். பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு...

தமிழகம் முழுவதும் நேற்று ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு போடப்பட்டிருந்த பொருட்காட்சிக்கு நேற்று இரவு சென்ற ஆகாசம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர்களுக்கும், மதுரையை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மதுரையை சேர்ந்த சிலர் ஆகாசம்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை பீர் பாட்டிலால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராம்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். அதிகாலையில் தலையில் வலி ஏற்பட்டு மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறி உயிரிழந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மதுரையை சேர்ந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Aug 1, 2019, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.