விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு அவர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 111 பேருக்கு உயிர் காக்கும் தலைக்கவசத்தை அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் வழங்கினார்.