கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிவருவதாக அந்தந்த மாவட்ட காவல் துறையினருக்குப் பொதுமக்கள் புகார்கள் அளித்துவந்தனர். அதன்படி காவல் துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கைது செய்துவருகின்றனர்.
அதன்படி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழ்ஒட்டம்பட்டியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தச் சோதனையில் கீழ்ஒட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மாரியப்பன், நாகஜோதி, மயிலாடும்துறை காளீஸ்வரன் ஆகிய 4 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாகக் கைதுசெய்யப்பட்டனர். அதையடுத்து அவர்களிடமிருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றி காவல் துறையினர் அழித்தனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் சாத்தூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: வாழைத்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது!