ETV Bharat / state

மூன்று வீடுகளில் தொடர் திருட்டு: முன்னாள் காவலர் கைது! - பணம் திருடிய காவலர் கைது

விருதுநகர்: சாத்தூரில் அடுத்தடுத்துள்ள மூன்று வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை திருடிய காவலரை சாத்தூர் நகர் காவல் துறையினர் கைது செய்தனர்.

Formar police arrested for money theft
Formar police arrested for money theft
author img

By

Published : Jun 13, 2021, 12:52 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் தெருவிலுள்ள வக்கீல் சந்து பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (35). இவரது மனைவி சங்கீதா (30).லோடு வண்டி டிரைவராக பணிபுரியும் பாண்டியன் லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்குச் சென்றுள்ளார்.

இவரது மனைவி சங்கீதா தீப்பெட்டி நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் வேலை முடித்து வீடு திரும்பிய சங்கீதா, வீடு திறந்த நிலையில் வீட்டின் கதவு உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 4ஆயிரத்து 500 ரூபாய் பணமும் ஒன்றரை கிராம் தாலியும் திருடு போனது தெரியவந்தது.

மேலும், சங்கீதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயலட்சுமி (29) என்பவரது வீட்டின் கதவை உடைத்து அலமாரியிலுள்ள 400 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக இவர்கள் சாத்தூர் நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், கான்வென்ட் தெற்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (37) என்பவர் வீட்டிலும் பீரோவை உடைத்து 3ஆயிரத்து 500 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த பகுதியில் சந்தேகத்தின் பெயரில் சுற்றித் திரிந்த ஒருவரை பிடித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கற்குவேல் (29) என்பது தெரியவந்தது.

மேலும், இவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்ததாகவும், இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால் கடந்த 2019ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சாத்தூர் நகர் பகுதியிலுள்ள மூன்று வீடுகளில் நகை, பணம் திருடியதும் இவர்தான் என்பது உறுதியானது. இதையடுத்து கற்குவேலை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.