தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் வனத்துறை இணைந்து நடத்தும் வனப்பாதுகாப்பு மற்றும் வனத் தீ விபத்து கட்டுப்படுத்துதல் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வன உயிரியல் விரிவாக்க மைய அலுவலத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், வனச்சரக அலுவலர்கள் செல்லமணி, பால்பாண்டியன் தலைமையேற்றனர்.
மாவட்ட அலுவலர்கள், தீயணைப்பு துறையினர்கள் மற்றும் வனத்துறையினர்களுக்கு விழிப்புணர்வுகளை எடுத்துரைத்த போது மலை பகுதிகளில் இயற்கை சூழ்நிலையில் தீ பற்றுவது அல்லது மனிதர்களின் எதிர்பாராத செயல்களால் தீ பற்றுவது குறித்து விளக்கமளித்தனர். பின்னர் பற்றிய தீயை எவ்வாறு எதிர்நோக்கி எளிதில் அணைப்பது என்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அம்பேத்கர் நற்பணி மன்றத்தினரால் பரபரப்பு!