ETV Bharat / state

பட்டாசு ஆலையில் வெடி விபத்து இருவர் பலி - பட்டாசு ஆலை

விருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் நிகழ்விடத்திலேயே இரண்டு பேர் உடல் சிதறி பலியாகினார்.

File pic
author img

By

Published : May 30, 2019, 12:46 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சொந்தமாக துலக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 70க்கும் மேற்பட்ட அறைகளும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பட்டாசு ஆலையில் காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அணுகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை தயார் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த சுந்தர்ராஜ், முருகேசன் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பலியானாகின. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வேறு அறைகளுக்கு தீ பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து
மேலும் உடல் சிதறி இறந்த இருவரின் உடல்களை சேகரித்து உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர்
30-05-19

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஊழியர்கள் 2 பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை துலுக்கன்குறிச்சியில் செயல்பட்டு வருகிறது இந்த ஆலையில் சுமார் 70க்கும் மேற்பட்ட அறைகளும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணி செய்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை நாக்பூர் லைசன்ஸ் பெற்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பட்டாசு ஆலையில் காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலையில் உள்ள 71வது அறையில் அம்மையார் பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (57) என்பவரும் துலுக்கன்குறிச்சியை சேர்ந்த முருகேசன் (58) என்பவரும் அணுகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தனர்
அப்போது எதிர்பாராதவிதமாக மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த இரண்டு ஊழியர்களும் உடல் சிதறி பலியானார்கள்

சம்பவம் அறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் உடல் சிதறி இறந்த 2 பேரின் உடல்களை சேகரித்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

TN_VNR_1_30_FIREWORKS_FIRE_ACCIDENT_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.