தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஸ்ரீவித்யா கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வைகைச்செல்வன் நுழைந்ததால், அமமுக முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனால் அதிமுக, அமமுகவினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது. இதில் திருமலைராஜன் என்பவருக்கு சட்டை கிழிந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியாளருமான கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். இதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைநகர் முழுவதும் கைப்பற்றுகிறதா திமுக?