ETV Bharat / state

பெண்கள் ஆர்வமுடன் வாக்களிக்கும் பிங்க் வாக்குச்சாவடி! - Female Polling Booth

விருதுநகர்: சாத்தூர் தொகுதியில் பெண்களுக்கான சிறப்பு இளஞ்சிவப்பு (PINK) வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

பிங்க் வாக்குச்சாவடி  பிங்க் வாக்கு மையம்  சாத்தூர் பிங்க் வாக்குச்சாவடி  Female voters eagerly voting at the Pink polling Booth  Pink Poling Booth  Pink Booth  Female Polling Booth  பெண்கள் வாக்குச்சாவடி மையம்
Female voters eagerly voting at the Pink polling Booth
author img

By

Published : Apr 6, 2021, 4:13 PM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பெரியார் நகர் வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்குச்சாவடி மைய எண் 258ல் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி (PINK POLING BOOTH) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையம் தனி சிறப்பு வாய்ந்த மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சம் பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடிய வாக்குப்பதிவு மையமாக உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் மொத்தம் 650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சாவடி மையம் பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில், இளம்பெண்கள், புதிய பெண் வாக்காளர்கள் என ஆர்வமுடன் இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர்.

பிங்க் வாக்குச்சாவடியை ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு நடைமுறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வாக்களிக்க வரும் பெண்களிடம் பிங்க் வாக்குச்சாவடி மையம் அமைத்தல் அவசியம் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறைகளை மீறிய உதயநிதி: விளக்கம் கேட்கும் சத்யபிரத சாகு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.