விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாலாங்குளம் கண்மாயில் இரண்டு பெண் மயில்களின் தோகைகள் பிடுங்கபட்டு, அவற்றின் இறைச்சியை சமூக விரோதிகள் தீயிட்டு சுட்டு சாப்பிட்டுள்ளனர்.
நாட்டின் தேசிய பறவையான மயில்கள் அழிந்துவரும் நிலையில் அவற்றை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரண்டு பெண் மயில்களை கொன்று சமைத்து சாப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... அன்னவாசல் அருகே மயில்களை வேட்டையாடிய மூவர் கைது!