விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிவந்திப்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (49). அவர் சொக்கலிங்காபுரத்தில் உள்ள பாட்டாசு ஆலை ஒன்றில் பணிபுரிந்துவந்தார். மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கிவந்த அந்த ஆலையில், இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் பணியை தொடங்கியுள்ளனர். அப்போது மருந்து கலவை உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ராமமூர்த்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து: முதலமைச்சர் நிவாரணம்