விருதுநகர்: ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு, வாறுகால் வசதி இல்லாதது போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
இப்பகுதி மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உப்பத்தண்ணீர் மோட்டார்கள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இந்த மோட்டார்களில் பழுதான மோட்டார்களை சரிசெய்யும் பணியில் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
இந்நிலையில், மோட்டார்களில் உள்ள பழுதுகளை நீக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஊராட்சி மன்றம் சார்பில் உரிய நிவாரணமும், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள்: அதிமுக தொண்டர்கள் அலப்பறை