ETV Bharat / state

தேர்தல் முன்விரோதம்: கோஷ்டி மோதலில் வாகனங்களுக்கு தீ வைப்பு

விருதுநகர்: தேர்தல் முன் விரோதம் காரணமாக ஒரே கிராமத்தை சேர்ந்த நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VNR
VNR
author img

By

Published : May 5, 2021, 8:43 PM IST

விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இதில் மாதவன் மீது வழக்குப்பதிவு செய்து ஓராண்டு விருதுநகர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து நேற்று (மே 4) மாலை தங்கப்பாண்டியும் அவரது மணைவி லாவண்யாவும் விருதுநகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடமலைக்குறிஞ்சி சென்றுகொண்டிருந்தனர். அப்போது சின்னமூப்பன்பட்டி அருகே மாதவன் ஆதரவாளா்கள் 5 பேர் கொண்ட கும்பல் காரை ஏற்றி தங்கப்பாண்டியை கொலை செய்ய முயற்சி செய்தாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த தங்கப்பாண்டியும் லாவண்யாவும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டியின் ஆதரவாளர்கள் மாதவனின் உறவினரான மணிமாறன் என்பவரது வீட்டை அடித்தும் வீட்டின் அருகில் இருந்த இரண்டு வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.

மேலும் அருகில் இருந்த 4 இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனா். இதனால் வடமலைக்குறிஞ்சி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.