தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தற்போதைய சூழலில் உரிய ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கு மேல் பணம், பரிசுப் பொருட்களை கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இவற்றைக் கண்காணிக்க அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கண்காணிப்புக்குழுவினரும் பறக்கும் படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (மாார்ச் 03) விருதுநகர் - சிவகாசி சாலையில் அழகாபுரி பிரிவில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோட்டநத்தம் சென்ற காரைச் சோதனை செய்தனர். அதில் வந்த சதர்ம சதன்(35) முறையான ஆவணம் இன்றி ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் வந்துள்ளார்.
உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஆவணத்தைக் காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் சதர்ம சதனை அறிவுறுத்தி அனுப்பினர்.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!