ETV Bharat / state

மகப்பேறு மருத்துவமனை கால்வாயில் கழிவுகள் தேக்கம் - நோய் பரவும் அபாயம் - விருதுநகர்

விருதுநகர்: மகப்பேறு மருத்துவமனை முன்புற கால்வாயில், கழிவுகள் தேங்கியுள்ளதால்  சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

drainage issue
author img

By

Published : Sep 19, 2019, 7:24 PM IST

விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இராசபாளையம் மற்றும் 30க்கும் மேற்பட்ட அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் என சிகிச்சை பெற 500க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கால்வாயில் துர்நாற்றம் வீசியும், நோய் பரப்பும் கொசுக்கள், ஈக்களும் காணப்படுவது கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கால்வாயில் கழிவுகள் தேங்கி நோய் பரவும் அபாயம்

இது குறித்து சிகிக்சை பெற்றுவருபவர்கள் மருத்துவ அலுவலர் மாரியப்பனிடம் புகார் கூறிய போது, நகராட்சித் துறை அலுவலர்களிடம் பலமுறை மருத்துவமனை சார்பில் புகார் அளித்து கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் சுகாதாரக் கேட்டினை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என தெரிவித்தார். நகரின் மையப்பகுதியில் இயங்கும் அரசு மருத்துவமனைக்கே சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காத நகராட்சி அலுவலர்களுக்கு இப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்!

Intro:விருதுநகர்
19-09-19

மகப்பேறு மருத்துவமனை முன்புற கால்வாயில் கழிவுகள் தேங்கியுள்ளதால்  சுகாதாரக்கேடு  நோய் பரவும் அபாயம் நாகராட்சி நிர்வாகம் அலட்சியம்  

Tn_vnr_02_hospital_drainage_issue_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்புற கால்வாயில் கழிவுகள் தேங்கியுள்ளதால்  சுகாதாரக்கேடு  நோய் பரவும் அபாயம் நாகராட்சி நிர்வாகம் அலட்சியம்  

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இராஜபாளையம் மற்றும் 30க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்து தினந்தோறும் கர்ப்பினி பெண்கள்  தாய்மார்கள் குழந்தைகள் என  சிகிச்சை  பெற 500க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை சுற்றியுள்ள கால்வாயில் துர்நாற்றம் வீசியும், நோய் பரப்பும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் படர்ந்து காணப்படுவது கர்ப்பிணி தாய்மார்கள் , மற்றும் நோயாளிகள் பெறும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சிகிக்சை பெற்று வருபவர்கள் மருத்துவ அதிகாரி மாரியப்பன் அவர்களிடம் புகார் கூறிய போது நகராட்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை மருத்துவமனை சார்பில் புகார் அளித்தும் கோரிக்கையும் வைத்துள்ளோம். ஆனால் இதுவரை செவிசாய்த்து வாருகால் சுகாதார கேட்டினை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என தெரிவித்தார். நகரின் மையப்பகுதியில் இயங்கும் கர்பினி தாய்மார்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைக்கே சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காத நகராட்சி அதிகாரிகள் மீது இப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். மேலும் மர்ம காய்ச்சல், டெங்கு நோய் பரவும் சூழலை நகராட்சி அதிகாரிகள் உருவாக்குவதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.