ETV Bharat / state

சிவகாசி இரட்டை கொலை வழக்கு: கொலையாளிகள் கைது! - double murder in sivakasi

விருதுநகர்: இரட்டை கொலை வழக்கில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

virudhunagar murder accquit arrest  சிவகாசி இரட்டை கொலை வழக்கு  double murder in sivakasi  8 acquits arrested
சிவகாசி இரட்டை கொலை வழக்கு
author img

By

Published : Nov 27, 2019, 6:24 PM IST

சிவகாசி நேரு காலணியைச் சேர்ந்த முருகனும், அண்ணா நகரைச் சேர்ந்த அர்ஜுனனும் சுமை தூக்கும் தொழிலாளர்கள். இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ள நிலையில், இருவரும் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டு ஒருவர் உடல் காரணேசன் சந்திப்பு பகுதியிலும், மற்றொருவரின் உடல் நேரு காலணியிலும் வீசப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதற்காக தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடிவந்த நிலையில், காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பாலமுருகனின் தந்தையைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

'பஜ்ஜி சரியில்லை' - என சொன்னவரைக் கத்தியால் வெட்டிய வடஇந்தியர்

விசாரணையில், பாலமுருகன் மீது சந்தேகம் எழவே, தலைமறைவாக இருந்த பாலமுருகனை திருத்தங்கல் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட முருகன், அர்ஜுனனுக்கும் அவர்களுடன் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சக தொழிலாளியான சின்னராமு, வேல்முருகன் ஆகிய இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது.

கர்நாடகாவில் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபர்!

இரு தரப்புகளுக்கிடையே நடைபெற்ற பிரச்னையை மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் பாலமுருகன் கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்ப்பது போல் பேசி சின்னராமு, வேல்முருகன் ஆகிய இருவருக்கும் ஆதரவாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகனும் அர்ஜுனனும் கட்டப்பஞ்சாயத்து நடத்திய பாலமுருகன், சின்னராமு, வேல்முருகன் ஆகிய மூன்று பேரையும் கொலை செய்ய, இரண்டு வாரங்களுக்கு முன்னர் விருதுநகரில் உள்ள கூலிப்படை ஒன்றிற்கு முன் பணம் கொடுத்துள்ளனர்.

கூலிப்படையைச் சேர்ந்த ஒருவருக்கு சின்னராமுவிற்கு நெருக்கமான நபர் என்பதால் அவரிடம் “உன்னைக் கொலை செய்ய முருகன், அர்ஜுனன் ஆகிய இருவரும் தன்னிடம் பணம் தந்துள்ளனர்... தப்பித்துக் கொள்!” என எச்சரித்துள்ளார்.

ஒப்பந்த ஓட்டுநர் ஓட்டிய தெலங்கானா அரசுப் பேருந்து விபத்து - இளம் பெண் உயிரிழப்பு

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட சின்னராமு, பாலமுருகன், வேல்முருகன் ஆகிய மூன்று பேரும் முருகன், அர்ஜுனன் இருவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. அதற்காக சமாதான பேச்சுவார்த்தை நடத்த பாலமுருகன் அவர்களிருவரையும் 25ஆம் தேதி மாலை 7 மணியளவில் தொலைபேசி மூலம் அழைத்துள்ளார்.

அவரை நம்பி சென்ற இருவரையும் சிவகாசி அடுத்துள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மது வாங்கிக்கொடுத்து, மது போதை உச்சத்தை எட்டிய நிலையில் ஏழு பேர் கொண்ட கும்பல் அவர்களை பீர் குப்பி, கட்டை ஆகியவற்றால் சராமரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த அர்ஜுனனைபாலமுருகன் தனது நண்பரான சரவணகுமாருடன் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக பெண், குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை

ஒரு கட்டத்தில் பதற்றமடைந்த சரவணகுமார் பாதி வழியிலேயே அர்ஜுனனை இறக்கிவிட்டுச் செல்ல, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதேபோல் முருகனையும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து நேரு காலணியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் தொடர்பாகப் பாலமுருகன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து சக சுமை தூக்கும் தொழிலாளர்களான சின்னராமு, வேல்முருகன், சக்திவேல், காளிராஜன், சபரீஸ்வரன், மாரீஸ்வரன், சரவண குமார் ஆகிய எட்டு பேரைக் கைது செய்து சிவகாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

Intro:விருதுநகர்
27-11-19

இரட்டை கொலை வழக்கில் முன்விரோதம் மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tn_vnr_02_murder_accuest_arrest_photo_script_7204885Body:சிவகாசியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் முன்விரோதம் மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகாசி நேரு காலனியை சேர்ந்த முருகனும் அண்ணா நகரை சேர்ந்த அர்ஜுனனும் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இருவர் மீதும் கொலை கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ள நிலையில் இருவரும் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு ஒருவர் காரணேசன் சந்திப்பு பகுதியிலும் மற்றொருவர் நேரு காலனியிலும் வீசப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின் பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட முருகனுக்கு சுதா என்ற மனைவியும், 8 வயதில் நாகபாலா என்ற மகன் உள்ள நிலையில் மனைவி சுதா தற்பொழுது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். மற்றொரு கொலையுண்ட நபர் அர்ஜுனனிற்கு சத்தியா என்ற மனைவியும் 12 வயதில் மகளும் உள்ளனர். இந்த இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை சுதா மற்றும் சத்தியா ஆகிய இருவரும் கொடுத்த தகவலின்படி மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தந்தையை பிடித்து விசாரணை நடத்தியதில் போலீஸாருக்கு பாலமுருகன் மீது சந்தேகம் எழுந்ததால் தலைமறைவாக இருந்த பாலமுருகனை திருத்தங்கல் பகுதியில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட முருகன் மற்றும் அர்ஜுனனுக்கும் அவருடன் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சக தொழிலாளியான சின்னராமு மற்றும் வேல்முருகன் ஆகிய இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே இவர்கள் இரு தரப்புகளுக்கிடையே நடைபெறும் பிரச்னையை மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகன் கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்ப்பது போல் பேசி சின்னராமு மற்றும் வேல்முருகன் ஆகிய இருவருக்கும் ஆதரவாகவே நடந்து கொண்டு முருகன் மற்றும் அர்ஜுனனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகனும் அட்ஜுனனும் கட்டப்பஞ்சாயத்து நடத்திய பாலமுருகன், சின்னராமு மற்றும் வேல்முருகன் ஆகிய 3 பேரையும் கொலை செய்ய கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் விருதுநகரில் உள்ள கூலிப்படை ஒன்றிற்கு முன் பணம் கொடுத்துள்ளனர். அப்போது கூலிப்படையை சேர்ந்த ஒருவர் கொலை செய்ய அடையாளம் காட்டப்பட்ட சின்னராமுவிற்கு நெருக்கமான நபர் என்பதால் சின்னராமுவிடம் உன்னை கொலை செய்ய முருகன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் தன்னிடம் பணம் கொடுத்துள்ளதாகவும் தப்பித்து கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சின்னராமு, பாலமுருகன், வேல்முருகன் ஆகிய 3 பேரும் முருகன், அர்ஜுனன் இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இருவரையும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பாலமுருகன் கடந்த 25ம் தேதி மாலை 7 மணியளவில் போன் மூலம் அழைத்துள்ளார். அவரை நம்பி சென்ற இருவரையும் சிவகாசி அடுத்துள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று மது வாங்கிக்கொடுத்து மது போதை உச்சத்தை எட்டிய நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் முருகன் மற்றும் அர்ஜுனனை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் பாலமுருகன் தனது நண்பரான சரவணகுமாரை இரு சக்கர வாகனத்தில் வரவழைத்து அர்ஜுனனை சரவணகுமாரின் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் பதட்டமடைந்த சரவணகுமார் பாதி வழியிலேயே அர்ஜுனனை இறக்கிவிட்டு செல்ல ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதேபோல் முருகனையும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து நேரு காலனியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் தொடர்பாக பாலமுருகன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சக சுமை தூக்கும் தொழிலாளர்களான சின்னராமு, வேல்முருகன், சக்திவேல், காளிராஜன், சபரீஸ்வரன், மாரீஸ்வரன் மற்றும் சரவண குமார் (ஓட்டுநர்) ஆகிய 8 பேரை கைது செய்து சிவகாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.