விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் 23ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவினர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்துள்ளனர். இக்கூட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின் மீண்ட ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனும் கலந்துகொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், கரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பிய பின் 14 நாள்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், கடந்த 29ஆம் தேதிதான் தங்கபாண்டியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
ஆனால், அவர் இன்று பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.