நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டம், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள திடலில் நடைபெற்றது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனை ஆதரித்து அவர் பேசியபோது, பொதுக்கூட்ட மேடை முன்பு பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாற்காலிகள் பெரும்பாலும் காலியாகவே காணப்பட்டன.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொதுக்கூட்டத்தில் ஆட்கள் இல்லாமல் இவ்வாறு வெறிச்சோடி காணப்பட்டது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. விருதுநகரில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் இரண்டாவது முறையாக தேர்தல் களத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக சாதனையைத் தரவில்லை, வேதனையைத்தான் தந்துள்ளது : ஸ்டாலின் அதிரடி