ETV Bharat / state

'அவர் ரவுடி துறை அமைச்சர்’ - ராஜேந்திர பாலாஜியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின் - ராஜேந்திர பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின்

விருதுநகர்: ”ராஜேந்திர பாலாஜி என்ன துறை அமைச்சர் என்றால், ரவுடி துறை அமைச்சர் என்று தான் சொல்ல வேண்டும்; இவர் பபூன், பலுான் ரவுடி”என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின்
ராஜேந்திர பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின்
author img

By

Published : Mar 31, 2021, 10:51 AM IST

Updated : Mar 31, 2021, 11:08 AM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாரியம்மன் கோயில் திடலில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் ”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உள்ள சொத்துக்குவிப்பு வழக்கை விரைவுபடுத்தி, அவரை சிறையில் அடைப்போம். அதேபோல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்போம்.

சிவகாசி தொகுதியிலிருந்து விரட்டப்பட்ட பின் தான், ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். அவர் என்ன துறை அமைச்சர் என்று கேட்டால், ரவுடி துறை அமைச்சர் என்று தான் சொல்ல வேண்டும் ; இவர் பபூன், பலுான் ரவுடி. அவருக்கு வாக்களிக்காதீர்கள்.

வாயைத் திறந்தால் வெட்டிடுவேன், குத்திடுவேன், நாக்கறுப்பேன், வீட்டுக் கதவை உடைப்பேன், சட்டையைக் கிழிப்பேன், துாக்கில் தொங்க விடுவேன், ரப்பர் குண்டால் சுடுவேன், தீவிரவாதியாக மாறுவேன் என்று பேசியும், மற்றவர்கள் சாதி, மதம் பெயர் சொல்லி திட்டுகிற அமைச்சராகவும் இருக்கிறார். இதெல்லாம் ஒரு அமைச்சர் பேசுகிற பேச்சா... சொந்தக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரால் தன் உயிருக்கு ஆபத்து என முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளித்த கதையும் உங்களுக்குத் தெரியும்.

அரசியல் சாசன சட்டப்படி எந்த வார்த்தையை சொல்லக் கூடாதோ, அந்த வார்த்தையை தான் அவர் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இவர் அமைச்சராகவே இருந்திருக்க முடியாது” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக சாடிப் பேசினார்.

ராஜேந்திர பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஜெயிச்சாலும், பாஜக ஜெயிச்சதா தான் அர்த்தம். மோடியை, டாடி என்று சொன்னவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தனது துறையைப் பற்றி பேசியது கிடையாது. ஆவின் பால் சம்பந்தமாக முகவர்கள் கொடுத்த குற்றச்சாட்டிற்கு அவர் பதில் சொல்லவில்லை.

தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். பிரதமர் பொறுப்பில் இருக்கக்கூடிய அவர், மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்கு சென்றால் தன் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பற்றி பேசி இருக்க வேண்டும். அதைச் சொன்னால் உள்ளபடியே நாம் பாராட்டி இருக்கலாம். அதை விட்டுவிட்டு வெறும் பொய்யாக பேசியிருக்கிறார். திமுக - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

பிரதமரிடம் அடக்கமாக கேட்கிறேன். தாராபுரத்தில் இருந்து நீங்கள் பேசிய மேடையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில்தான் பொள்ளாச்சி. பொள்ளாச்சியில் 250 இளம் பெண்களை பாலியல் கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியது உங்களுக்குத் தெரியாதா, இதெல்லாம் தெரியாமல் இருந்தால் நீங்கள் பிரதமராக இருப்பதற்கு லாயக்கில்லை.

அதிமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்தக் கொடுமை நடந்துள்ளது. நானும் ஒரு பெண்ணைப் பெற்றவன் தான். நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் மறந்து, மறைத்துவிட்டு பிரதமர் எங்களையும் காங்கிரசையும் பற்றி பேசுகிறார்.

சட்டம், ஒழுங்கை பாதுகாக்கக் கூடிய பெண் எஸ்பிக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உயர் அலுவலர் முதலமைச்சருக்கு மிகவும் வேண்டியவர். நீங்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு காங்கிரஸையும் திமுகவையும் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, மக்களுக்கு தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், தான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிங்க:’திமுக தலைமையிலான ஆட்சி இந்தியாவை காப்பாற்றும்’ - சீத்தாராம் யெச்சூரி

Last Updated : Mar 31, 2021, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.