ETV Bharat / state

தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - விருதுநகர் மாவட்ட குற்றச் செய்திகள்

விருதுநகர்: சிவகாசி அருகே தேமுதிக பிரமுகரை படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!
Dmdk party member murder in virudhunagar
author img

By

Published : Sep 6, 2020, 10:30 PM IST

Updated : Sep 7, 2020, 8:46 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேவுள்ள திருத்தங்கலில் வசித்து வருபவர் சங்கிலி ராஜன் (48). தேமுதிக திருத்தங்கல் நகர முன்னாள் செயலாளரான இவர், விருதுநகர் செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், திருத்தங்கலில் இருந்து அதிவீரன்பட்டி செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் உடலில் கத்திக் குத்து காயங்களுடன் சங்கிலி ராஜன் படுகொலை செய்யப்பட்டார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை சம்பவம் நடந்ததால் யாருக்கும் தெரியாத நிலையில் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்ற நபர்கள் உடலை பார்த்து திருத்தங்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விருதுநகரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையான தேமுதிக பிரமுகர் சங்கிலி ராஜனுக்கும் திருத்தங்கலைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்துவந்த நிலையில், அவரது உறவினர்களுக்கும் சங்கிலி ராஜனுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தங்கல் காவல் துறையினர், பல்வேறு கோணங்களில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட சங்கிலி ராஜனுக்கு, ராமலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகளும் உள்ளனர்.

Last Updated : Sep 7, 2020, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.