விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசுத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்கிட வேண்டும், முடக்கப்பட்ட இரண்டு மாத நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: விருதுநகரில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐவருக்கு தீவிர சிகிச்சை