விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயில், தரைமட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது.
மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் மட்டுமே கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புத்தாண்டையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகைதந்தனர்.
ஆனால், கோயிலுக்குள் செல்வதற்கு வனத் துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாமென்று வந்த பக்தர்கள் பெரும் ஏமாற்றமத்துடன் வீடு திரும்பினர்.
இதையும் படிங்க: குன்னூர் மலை ரயிலில் கூட்டம் அதிகரிப்பு: ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள்!