விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தொடர்ந்து மூன்று நாள்களாக பெய்த மழையின் காரணமாக மலையடிபட்டி பகுதி செல்லும் முக்கிய சாலையில் பள்ளம் ஏற்பட்டு, மழைநீர் தேங்கியுள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும். மழைநீர் தேங்கியதால் இந்த சாலை கடந்து செல்கையில், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இங்கு பணியிலிருந்த போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், தலைமை காவலர் ஜெயராஜ், காவலர்கள் முத்துராஜ், ஆறுமுகம், தமிழ் குமார் ஆகியோர் மலையடிப்பட்டி ரயில்வேகேட் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மண்கொண்டு நிரப்பி போக்குவரத்தை சரிசெய்து வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் செல்ல வழிவகுத்தனர். போக்குவரத்து காவலர்களின் இத்தகையச் செயலை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.