ETV Bharat / state

முடிவு தெரியாத 2000 கரோனா சோதனை: விருதுநகரில் தொற்று அதிகரிக்கும் இடர்

விருதுநகர்: இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் சோதனை முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இடர் ஏற்பட்டுள்ளது.

Corona cases in virudunagar
விருதுநகர் கரோனா நிலவரம்
author img

By

Published : Jun 30, 2020, 8:23 AM IST

விருதுநகரில் ஒரேநாளில் 77 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 444 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 202 பேர் குணமாகி உள்ள நிலையில், 236 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் தற்போதுவரை ஆறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் முடிவுகள் தற்போது வரை வரவில்லை.

எனவே மேலும் நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மட்டுமல்லாது, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் நடந்த கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.