ETV Bharat / state

காதல் ஜோடி மாயம்: மின்கம்பத்தில் கட்டி வைத்து காதலனின் தாயார் மீது தாக்குதல்! - அருப்புக்கோட்டை அருகே காதல் ஜோடி மாயம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காதல் விவகாரத்தில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக 14 பேர் மீது பரளச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தாயார் மீது தாக்குதல்
தாயார் மீது தாக்குதல்
author img

By

Published : Jan 26, 2022, 7:47 PM IST

Updated : Jan 26, 2022, 8:11 PM IST

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கே.வாகைக்குளத்தை சேர்ந்தவர், மீனாட்சி(43). இவருடைய மகன் சக்திசிவா(24). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சக்திசிவா அதே ஊரைச் சேர்ந்த சுதா என்பவரின் மகள் புவனேஸ்வரியை(19) காதலித்து வந்துள்ளார்.

இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத்தெரிவித்து வந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஊருக்கு வந்த சக்திசிவா புவனேஸ்வரியுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும் சக்திசிவா மற்றும் புவனேஸ்வரியை பல இடங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று(ஜன.25) மாலை சக்திசிவாவின் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்த புவனேஸ்வரியின் தாய் சுதா, தனது மகள் புவனேஸ்வரி எங்கே எனக் கேட்டு பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

தொடர்ந்து சக்திசிவாவின் தாய் மீனாட்சியை, சுதா மற்றும் அவருடைய உறவினர்கள் தரதரவென இழுத்துச்சென்று சாலையில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி: சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற பரளச்சி காவல் துறையினர் மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனாட்சியை தாக்கியதாக சுதா, அவரது உறவினர்கள் நாகவள்ளி, செல்வி, துரைப்பாண்டி உள்பட 14 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீனாட்சி சிகிச்சைப்பெற்று வரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள், மீனாட்சியைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மறியலில் ஈடுபட முயன்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 'அனைத்து சமூகங்களின் வளர்ச்சியே சமூக நீதி' - மு.க. ஸ்டாலின்

Last Updated : Jan 26, 2022, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.