விருதுநகர்: கரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களில் சிலருக்குக் காய்ச்சல் மற்றும் சளி போன்ற கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது. பின்னர், அங்குள்ள 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 26 வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 26 வடமாநில தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!