விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 2ஆயிரத்து 181 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 72 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளான தங்களுக்கு தரமற்ற குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் சுகாதாரமற்ற நிலையில் வார்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த வீடியோவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கரோனா நோயாளிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடத்தல்காரர்களிடம் சண்டை செய்து குழந்தையை மீட்ட தாய் - வெளியான சிசிடிவி காட்சிகள்!