ETV Bharat / state

விருதுநகரில் ஐந்தாயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jul 24, 2020, 10:38 PM IST

விருதுநகர்: மாவட்டத்தில் இன்று புதிதாக 480 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,193 ஆக உயர்ந்துள்ளது.

Corona impact exceeds five thousand in the award city!

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 4 ஆயிரத்து 770 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று மேலும் 480 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக இதுவரை 5ஆயிரத்து 193 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 2ஆயிரத்து 947 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

2 ஆயிரத்து 203 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தொற்றின் காரணமாக இன்று மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.