ETV Bharat / state

அரிசி ஆலை நச்சுக் கழிவுகளால் வளர்ப்பு மீன்கள் செத்து மிதப்பதாக புகார் - virudhunagar

ராஜபாளையம் அருகே குளத்திற்குள் விடப்படும் அரிசி ஆலை நச்சுக் கழிவுகளால் ஆயிரக்கணக்கான வளர்ப்பு மீன்கள் செத்து மிதப்பதாக புகார் எழுந்துள்ளது

அரிசி ஆலை நச்சுக் கழிவுகளால் வளர்ப்பு மீன்கள் செத்து மிதப்பதாக புகார்

author img

By

Published : Sep 19, 2022, 5:19 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் அருகே உள்ள இளந்திரை கொண்டானை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் அதே ஊராட்சிக்கு சொந்தமான பஞ்சம் தாங்கி குளத்தை கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக மீன்பாசி ஏலத்திற்கு எடுத்துள்ளார்.

ரூ. 6,800 ஏல தொகையை கட்டியதுடன், குளம் பராமரிப்பு மீன் குஞ்சுகள் வாங்கியது என மேலும் ரூ. 2.5 லட்சம் வரை செலவு செய்ததாக பாண்டியராஜன் தெரிவித்தார். மீன் குஞ்சுகள் வளர்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அருகே உள்ள அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன நச்சுக் கழிவுகள் குளத்திற்குள் விடப்படுவதாக புகார் தெரிவித்தார்.

ஆலையில் இருந்து குழாய்கள் மற்றும் சிறிய ஓடை அமைக்கப்பட்டு கழிவுகள் நாள் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இந்த ரசாயன நச்சு கழிவுகளின் வீரியத்தை தாங்க முடியாமல் குளத்திற்குள் விடப்பட்ட ரோகு, கட்லாக் மண்டை, சிசி, புல்லுக் கெண்டை மற்றும் பொட்லா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் செத்து விட்டதாக பாண்டியராஜன் தெரிவித்தார்.

அரிசி ஆலை நச்சுக் கழிவுகளால் வளர்ப்பு மீன்கள் செத்து மிதப்பதாக புகார்
குளத்திற்குள் ஒரே இடத்தில் ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தனக்கு ரூ. 3 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாண்டியராஜன் தெரிவித்தார்.மேலும் இக்குளத்திற்குள் 3 இடங்களில் ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே நச்சு கழிவுகள் குளத்திற்குள் விடுவதை தடுக்க கோரி ஆலை நிர்வாகத்திடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பல முறை புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.எனவே குளத்திற்குள் விடப்படும் கழிவுகளை தடுத்து நிறுத்தவும், அப்பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய துறை அலுவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட பாண்டியராஜன், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.