ETV Bharat / state

திமுகவுக்கு வாக்களிக்குமாறு பரப்புரை செய்த தேர்தல் அலுவலர் - அதிமுகவினர் குற்றச்சாட்டு - தேர்தல் அலுவலர் மீது புகார்

விருதுநகர்: ராஜபாளையம் தேர்தல் வாக்கு சாவடி எண்-1இல் பிஎல்ஓ அலுவலர் பூத் சிலிப் வழங்கி திமுகவுக்கு வாக்களிக்குமாறு வாக்குசாவடிக்குள் பரப்புரை செய்ததாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

complaint agaisnt polling officer
திமுகவுக்கு வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் பரப்புரை செய்ததாக அதிமுகவின் குற்றச்சாட்டு
author img

By

Published : Apr 7, 2021, 7:13 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேர்தல் வாக்கு சாவடி எண் -1, ராஜூக்கள் கல்லூரியில் வைத்து பொது மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வந்தனர். இதையடுத்து இந்த வாக்குசாவடியில் தேர்தல் அலுவலராக பணிபுரியும் தனுஷ் ராமலிங்கம் என்பவர் பூத் சிலிப் வழங்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பொதுமக்கள் மத்தியில் பரப்புரை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்து வாக்குச்சாவடியில் இருந்து தப்பி ஓடியதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குச்சாவடியில் தேவை இல்லாத நபர்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

திமுகவுக்கு வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் பரப்புரை செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், அதிமுகவினர் வாக்குசாவடியில் இருந்து வெளியேறி கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: திமுக வேட்பாளரின் காரை வழிமறித்த நபர்களால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.