விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் கடந்த 12ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அத்துடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் நடுசூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோரும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் நந்தினி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதையாகியுள்ள சம்பவம் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவி நந்தினிக்கு அரசு உதவிபுரிய கோரிக்கைவைக்கப்பட்டது.
அதன்படி பெற்றோர் விபத்தில் இறந்த நிலையில், பிற்காலத்தில் அரசு தரும் சலுகைகள் அனைத்தும் நந்தினிக்கே சேரும் வகையில் அவரது உறவினர்களிடம் சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், சிவகாசி வட்டாட்சியர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் கையெழுத்துப் பெற்றனர். பின்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம், ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை மாணவி நந்தினி பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: மெட்ரோவில் பயணித்த ராயபுரத்தின் செல்ல பிள்ளை ஜெயக்குமார்