ETV Bharat / state

'அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது' - முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சட்டமேதை அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது என்றும்; தமிழ்நாட்டில் ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியல் கட்சிகள் புறக்கணித்ததனை அவர், சுய விமர்சனத்தோடு சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று விருதுநகரில் இன்று (ஏப்.20) செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்
முத்தரசன்
author img

By

Published : Apr 20, 2022, 5:16 PM IST

விருதுநகர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'இலங்கையில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்தும் அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கடந்த 10 நாட்களாக மக்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த வித அரசின் அடக்குமுறைகள் அங்கு வெற்றி பெறவில்லை. இலங்கையில் சிங்களர், தமிழர் எனப் பாகுபாடு இன்றி அனைவரும் ராஜபக்ச குடும்ப அரசைக் கண்டித்துப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு; நாட்டை சீர்குலைக்கும்: இலங்கையில் நடைபெறும் போராட்டம் போல் இந்தியாவில் நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டு உள்ள விலைவாசியைக் கட்டுபடுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் நியாயமாக மக்களுக்கு கிடைக்க ஒன்றிய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. விலைவாசி உயர்வு பிரச்னையைத் திசை திருப்ப மதங்களின் பெயரால் நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. இந்த முயற்சி நாட்டையே சீர்குலைக்கும்.

விருதுநகரில் முத்தரசன் பேட்டி
பாஜகவை காலூன்ற விடாமல் இ.கம்யூனிஸ்ட் தடுக்கும்: உள்துறை அமைச்சர் அனைவரும் இந்தியைப் பேச வேண்டும். இந்தியைப் படிக்க வேண்டும் என்று சர்வாதிகார போக்குடன் உத்தரவு போடுகிறார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் சட்டங்களும் அணுகு முறையிலும் இருக்கிறது. இவைகளை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும். அதே மாதிரி, தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்றாமல் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும்.

25ஆவது இ.கம்யூனிஸ்ட் மாநாடு: அதேபோல், வருகிற ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக ஆக.9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு தினத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு "மோடி அரசே வெளியேறு" என்ற முழக்கத்துடன் பேரணி நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார்.

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு மக்கள் ஏங்குகிறார்கள் என பாஜக மாநிலத்தலைவர் கூறிய கருத்துக்குப் பதிலளித்த முத்தரசன், எடப்பாடி பழனிசாமியை உளவுத்துறை தேடிக்கொண்டு இருக்கிறது என்றார்.

மேலும் பேசிய அவர், ’இளையராஜா சிறந்த இசையமைப்பாளர்; அவர் சிறந்த ஞானி. இளையராஜாவின் வளர்ச்சியைக் கண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பெருமிதம் கொள்கிறது. இருப்பினும், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேநீர் விருந்து புறக்கணிப்பு; சுய விமர்சனம் செய்து பார்க்கவும்: ஆளுநர் பதவி என்பது மிக உயரிய பதவி ஆகும். அந்தப் பதவிக்கு உரிய மதிப்பளித்து அலங்கரிக்கக்கூடிய வகையில் ஆளுநர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். ஆளுநரின் தேநீர் விருந்தை அரசும் மற்றும் அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்தன. மேலும், தேநீர் விருந்து புறக்கணித்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி சுயவிமர்சனத்தோடு பார்க்க வேண்டும். மேலும், ஆளுநர் உரிய சுயவிமர்சனம் செய்து கொண்டு உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டப்படும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.