ETV Bharat / state

அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

அருப்புக்கோட்டை காந்தி நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 30) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
author img

By

Published : Oct 30, 2021, 4:25 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏழாவது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று (அக். 30) நடைபெற்று வருகிறது. இன்று ஒருநாளில், மாவட்டம் முழுவதும் 1,162 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சம் பேரை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு சென்றார். அதன் பின்னர் அருப்புக்கோட்டை வழியாக மதுரை விமான நிலையம் சென்று கொண்டிருந்தார்.

தடுப்பூசி பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர்

விமான நிலையம் செல்லும் வழியில் ஆய்வு

அப்போது வழியில், அருப்புக்கோட்டை காந்திநகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் சிறிது நேரம் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

அங்கு தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.