உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிருமி தொற்று ஏற்படாத வகையில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் அனைத்து பகுதியிலும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி சார்பில் ராஜபாளையம் முழுவதும் வாகனம் மூலம் கிருமிநாசினி கொண்டு சாலைகளைச் சுத்தும் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதையும் படிங்க: கரோனா: ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 3 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்