ETV Bharat / state

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை..! 4 பேர் படுகாயம்.. - sattur road accident

சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் நான்கு பேர் காயங்களுடன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை விபத்தில் 3 வயது குழந்தை பலி.4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

author img

By

Published : Apr 22, 2022, 10:44 PM IST

விருதுநகர்: கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்குவிளை பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான லிங்கேஸ் (36) மற்றும் சதீஷ் (34), சென்னை ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊரான ஆமணக்குவிளையில் உள்ள கோயிலில் குழந்தைக்கு முடி காணிக்கை செய்வதற்கு தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் லிங்கேஷ் என்பவரது மகள் லியா ஆதிரா என்ற மூன்று வயது குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்ததுள்ளது. மேலும் லிங்கேஸ் மற்றும் சதீஷ் இருவருடைய மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேருக்கு படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாத்தூர் காவல் துறையினர், படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'இன்னும் விசாரணை நிறைவுபெறவில்லை' - சசிகலா

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.