விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.எம்.டி. நகர் அமைந்துள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் சற்று குறைவாகவே காணப்படும்.
இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மனைவி திவ்யா, வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், திவ்யா அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
சிசிடிவியில் சிக்கிய கொள்ளையர்கள்
இச்சம்பவம் குறித்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணை
அதனடிப்படையில், ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை சாட்சியாக கொண்டு கொள்ளையர்கள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், காவல் துறையினர் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் 15 பவுன் நகை; 2 லட்சம் ரூபாய் கொள்ளை - கொள்ளையர்கள் அட்டகாசம்