ETV Bharat / state

இருசக்கர வாகனம் விபத்து: வெளியான சிசிடிவி காட்சி - வெளியான சிசிடிவி காட்சி

விருதுநகர்: ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

accident
accident
author img

By

Published : Jul 3, 2021, 4:05 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பூபால்பட்டி தெருவில் வசிப்பவர் ரவி (50). இவரது மனைவி குமாரி கமலா (48). இந்த தம்பதி அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்க ஜூன் 27 ஆம் தேதி சென்றனர்.

அங்கு அவர்கள் பொருள்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பினர். அப்போது ரவி சாலையை கடக்கும்போது பி.எஸ். நகரிலிருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரவி - குமாரி கமலா இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இருசக்கர வாகன விபத்து சிசிடிவி

படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ரவி சிகிச்சை பலனின்றி ஜூன் 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.