ETV Bharat / state

ரஜினி சொன்னது போல் 2021இல் அதிசயம் நிகழும் -முத்தரசன் - சிபிஐ மாநில செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

விருதுநகர்: ரஜினிகாந்த் கூறியதுபோல் 2021இல் அதிமுக ஆட்சி அகற்றப்படக்கூடிய அதிசயம் நிகழும் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

MUTHARSAN
author img

By

Published : Nov 22, 2019, 7:09 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம் வீட்டின், இல்ல திருமண விழாவில் சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேயர், உள்ளாட்சி, "பேரூராட்சி தேர்தலில் தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று அதிமுக அரசு அறிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. ஆட்சி அதிகாரம், பண பலம், படை பலத்தை கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ! அதே போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ரஜினிகாந்த் கூறியது போல 2021இல் அதிசயம் நிகழும். அது, அதிமுக அரசு அகற்றப்படக்கூடிய அதிசயமாக இருக்கும்.

இலங்கையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச இந்தியா வரும்போது இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை சுட்டிக்காட்டி இது போன்று இனி நடக்காத வண்ணம் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.

ரஜினி சொன்னது நடக்கும்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களது தோழமைக் கட்சிகளை உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக நிற்க வேண்டும் எனக் கூறுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு உத்தரவை போடுவதற்கு அவர் ஒன்றும் அதிகாரி அல்ல" என்றார்.

மேலும், ஒருசில கட்சிகள் தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட தாக்குதல் நடத்தி தரம் தாழ்ந்த அரசியல் நடத்தி வருகிறார்கள். அது போன்ற தாக்குதல்களை கைவிட வேண்டும் என திருமாவளவனை விமர்சிப்பவர்களுக்கு முத்தரசன் பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க: மேற்குத் தொடர்ச்சி வனப் பகுதிகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!

Intro:விருதுநகர்
22-11-19

மேயர், உள்ளாட்சி, பேரூராட்சி தேர்தலில் தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் என்று அறிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை- சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

Tn_vnr_03_mutharasan_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா முடிந்த பின் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அதில் மேயர், உள்ளாட்சி, பேரூராட்சி தேர்தலில் தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் என்று அறிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை.
ஆட்சி அதிகாரம் பண பலம் படை பலம் ஆகியவற்றைக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ அதே போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ரஜினிகாந்த் கூறியது போல 2021ல் அதிசயம் நிகழும். தற்போது உள்ள அதிமுக அரசு அகற்றப்படக்கூடிய அதிசயம் நிகழும் ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன். இலங்கையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இந்தியா வரும் போது இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை சுட்டிக்காட்டி இது போன்று இனி நடக்காத வண்ணம் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்தார் தொடர்ந்து பேசியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களது தோழமைக் கட்சிகளை உள்ளாட்சி தேர்தலில் தனித் தனியாக நிற்க வேண்டும் எனக் கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு உத்தரவை போடுவதற்கு அதிகாரி அல்ல. ஒரு சில கட்சிகள் தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட தாக்குதல் நடத்தி தரம் தாழ்ந்த அரசியல் நடத்தி வருகிறார்கள். அது போன்ற தாக்குதல்களை கைவிட வேண்டும் என திருமாவளவனை விமர்சிப்பவர்களுக்கு முத்தரசன் பதில் கூறினார் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.