விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகிலுள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டியலின சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ள பொது வழிபாட்டுத் தலமான காளியம்மன் கோயிலில், இப்பகுதி மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அதனோடு, அப்பகுதி மக்கள் வசிக்குமிடத்தில் சாலை வசதி ஏதும் இல்லாததால் ஊருக்குள் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வாழ்கின்றனர்.
சுடுகாடு ஊருக்குள் அமைந்துள்ளதால் அங்கு குடியிருப்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள், கோயிலுக்குள் அனுமதி வேண்டியும், அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்துத்தரக்கோரியும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
தாய், குழந்தையைக் கண்டு தாவிச் சென்ற காளை - வைரல் வீடியோ!
அவ்வாறு, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களது ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கையில் ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் விஜயராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.