விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனியில் வசித்துவந்தவர் இசக்கிமுத்து. கட்டடத் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கட்டட வேலைக்கு சென்ற இசக்கிமுத்து இரவு வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி அலைந்தனர். அப்போது அவர் அருகிலிருந்த கண்மாய் பகுதியில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இசக்கிமுத்து உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, இசக்கிமுத்துவை மர்ம நபர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.