விருதுநகர் மாவட்டம், சிவகாசி தேவி நகரில் வசிப்பவர் ராம்குமார். இவரது மனைவி ராம சித்ரா லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நான்காம் வகுப்பு பயிலும் சஸ்மிதா (10) என்ற மகளும், இரண்டாம் வகுப்பு படித்து வரும் கர்ணித் (8) என்ற மகனும் உள்ளனர்.
கரோனா தொற்று தொடங்கியது முதல் கடந்த ஆண்டிலிருந்து சஸ்மிதாவுக்கு செல்போன் மூலமாக ஆன்லைன் வகுப்பு நடந்து வரும் நிலையில், தனது தாயார் ராமசித்ராவின் செல்போன் மூலமாக ஆன்லைனில் கல்வி பயின்று வந்தார். இதன் காரணமாக தங்களுக்கென்று ஒரு செல்போன் வாங்க முடிவு செய்த அக்காவும் தம்பியும் தனது தாய், தந்தை, உறவினர்கள் அன்றாடம் வழங்கும் பணத்தையும் நாணயங்களையும் ஆளுக்கு ஒரு மண்பானை உண்டியலில் சேமித்து வந்தனர்.
அந்தப் பணத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது தாயாருடன் சென்று இருவரும் சிவகாசி உதவி ஆட்சியர் தினேஷ்குமாரிடம் தங்களது உண்டியல் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் எனக் கொடுத்தனர்.
சிறுவர்களின் இந்தச் செயலைக் கண்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.