விருதுநகர்: ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலை நேற்று காலை வழக்கம் போல் கோயில் பூசாரி மாரியப்பன் திறந்தார். அப்போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, கோயிலின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கிருந்த உண்டியலை உடைத்து 9 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க : பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி கருக்கலைப்பு செய்யலாமா - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?