ETV Bharat / state

‘தமிழ்நாடு’ பெயருக்காகப் போராடி உயிர் நீத்த சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா - தமிழ்நாடு பெயர் காரணமான சங்கரலிங்கனார்

விருதுநகர்: 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்திற்காக உண்ணாவிரதம் இருந்து தன்னுயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

sankaralinganar
sankaralinganar
author img

By

Published : Jan 27, 2020, 11:04 AM IST

தமிழ்நாட்டிற்கு 'மெட்ராஸ்' மாகாணம் என்ற பெயரை நீக்கிவிட்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பிறந்தநாள் விழா விருதுநகரில் கொண்டாடப்பட்டது. விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை மேடு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி - வள்ளியம்மை தம்பதிக்கு 1985ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி மகனாகப் பிறந்தவர் சங்கரலிங்கனார்.

சிறுவயதிலிருந்தே தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட சங்கரலிங்கனார், கதர் ஆடைகளை மட்டுமே உடுத்துவதில் தீவிரம் கொண்டிருந்தார். ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். 1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விருதுநகர் வந்தபோது அவருக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து 1933ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புக்காக நடை பயணம் மேற்கொண்டபோதும் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரலிங்கனார். விடுதலைக்குப் பின்னரும் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சங்கரலிங்கனார், தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்டவராக விளங்கினார். அதன் விளைவாக, சென்னை ராஜ்ஜியம் என்றிருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தியாகி சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா

இந்நிலையில், குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகளை ஒழிக்க வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக 1957ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி விருதுநகர் தேசபந்து திடலிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி 76ஆவது நாளான 1957 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் உயிர்துறந்தார். தமிழ்நாடு அரசு சார்பில் தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் கல்லூரி சாலையில் 1.6 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: 'குடிக்கத் தண்ணீர் இல்லை... தண்ணீர் கேட்டா அசிங்கமா திட்டுறாங்க'

Intro:விருதுநகர்
26-01-2020

தியாகி சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா

Tn_vnr_04_collector_function_vis_script_7204885Body:மெட்ராஸ் என இருந்தது பின்பு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றமடைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பிறந்தநாள் விழா விருதுநகரில் இன்று கொண்டாடப்பட்டது.
விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை மேடு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி- வள்ளியம்மை தம்பதிக்கு கடந்த 26.1.1895ல் மகனாப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். சிறுவயதிருந்தே தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் மிக்கவராகத் திகழ்ந்தவர். கதர் ஆடைகளை மட்டுமே உடுத்த வேண்டும் என்பதிலும் தீவிரம் கொண்டிருந்தார். ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். 1927ம் ஆண்டு மகாத்மா காந்தி விருதுநகர் வந்தபோது அவருக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். அதைத்தொடர்ந்து 1933ல் தீண்டாமை ஒழிப்புக்காக நடை பயணம் மேற்கொண்டபோதும் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார். கடந்த 1937ல் கரூரில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கைதானார், விடுதலை பெற்ற பின்னரும் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் தியாகி சங்கரலிங்கனார். தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்ட சங்கரலிங்கனார், சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாக மொழியாக தமிழ்மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக கடந்த 27.7.1957ல் தனது வீட்டிலும் அதைத்தொடர்ந்து விருதுநகர் தேசபந்து திடலிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி 76வது நாளான 1957 அக்டோபரில் தியாகி சுந்தரலிங்கனார் உயிர்துறந்தார். தமிழக அரசு சார்பில் தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் கல்லூரி சாலையில் ரூ.1.6 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்நிலையில், தியாகி சங்கலிங்கனாரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.