விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர், காவல் துறையினர் விழிப்புணர்வு பேட்ச் அணியும் நிகழ்ச்சி ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஆட்சியர் கண்ணன், காவல் கண்காணிப்பாளர் பெருமாள், கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேட்ச் அணிந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் விழிப்புணர்வு பதாகை முன்பு ஆட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் அலைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், அரசு அலுவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி; வரும் காலத்தில் சுழலுமா வைகோவின் பம்பரம்?