விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிழக்கு பகுதியில் வசித்துவந்த 60 வயது முதியவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மற்றும் 7 கி.மீ சுற்றளவில் சிவப்பு மண்டலமாக அறிவித்து பல்வேறு தடுப்பு தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை நகராட்சி எடுத்து வருகின்றது. மேலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ஆகிய பகுதியிலிருந்து வந்திருந்த ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம், தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி மருந்துகள் சுமார் 7 கி.மீ சாலைகள், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இரவு முழுவதும் தெளித்து தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது .
இதையும் படிங்க: மின்சாரத் துறைக்கு 300 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி