ETV Bharat / state

உற்சாகத்துடன் குளியல்போட்ட ஜெயமால்யதா யானை - ஆச்சரியப்பட்ட அஸ்ஸாம் அலுவலர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை தாக்கப்பட்டதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலான நிலையில் அஸ்ஸாம் வன அலுவலர்கள், யானையை நேரில் ஆய்வு செய்தனர்.

உற்சாகத்துடன் காணப்பட்ட ஜெயமாலியதா
உற்சாகத்துடன் காணப்பட்ட ஜெயமாலியதா
author img

By

Published : Sep 19, 2022, 7:45 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு பெண் யானை ஒன்று கொண்டு வரப்பட்டது.

அதற்கு ஜெயமால்யதா எனப் பெயர் சூட்டப்பட்டு, கோவில் மண்டபத்தில் வளர்க்கப்பட்டு வந்தது. தினமும் ஆண்டாள், ரங்கமன்னாரை தரிசித்து விட்டு வீதி உலா நிகழ்வுக்கு புறப்பட்டுச்செல்லும்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் வைத்து யானை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகன்கள் இரண்டு பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். புதிய பாகன்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், யானை தொடர்ந்து தாக்கப்படுவதாக போலியான வீடியோ பரவிக்கொண்டே இருந்தது.

அதனால் கடந்த 5ஆம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்புக்குழு அமைத்து யானை தாக்கப்பட்டதா என ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதனிடையே வீடியோ சர்ச்சையால் யானையை அஸ்ஸாமிற்குக் கொண்டு செல்ல, அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் அஸ்ஸாம் வனப்பாதுகாவலர் ஹித்தேஷ் மிஸ்ரா , காவல் கண்காணிப்பாளர் அபர்ணா நடராஜன், வன உயிரின பேராசிரியர் கே. கே. ஷர்மா உள்ளிட்ட சிறப்பு குழுவினர் கோயிலுக்கு நேரில் வருகை தந்தனர்.

உற்சாகத்துடன் குளியல்போட்ட ஜெயமால்யதா யானை - ஆச்சரியப்பட்ட அஸ்ஸாம் அலுவலர்கள்

அப்போது யானைக்கென 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குளத்தில், அது உற்சாக குளியல் போடுவதைக்கண்டு பின்னர் அது நல்ல உடல் நலத்துடன் உள்ளதா என உறுதிப்படுத்தினர்.

இதையும் படிங்க: ஆனைக்கட்டி மலைப்பகுதி விளிம்பில் கால் தவறி விழுந்து பெண் யானை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.