ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் - ரோகிணி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

விருதுநகர்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.

Actress Rohini
Actress Rohini
author img

By

Published : Dec 12, 2019, 2:18 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரோகிணி, மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகிணி, பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், பாதுகாக்க வேண்டியவர்களே பாதுகாக்க தவறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Actress Rohini

தொடர்ந்து, நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோகிணி, அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ரஜினி, கமல் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கினால் இருவரையும் வரவேற்பேன் என்றார்.

Intro:விருதுநகா்
12-12-19

ஹைதராபாத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திலும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் -நடிகை ரோகினி பேட்டி

Tn_vnr_01_actor_rohini_byte_vis_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு மகாகவி பாரதியார் புத்தகங்களும் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. நடிகை ரோகினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசு வழங்கினார். இவ்விழாவில் தமிழ்நாடு எழுத்தாளர் முற்போக்கு சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகினி. பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் அவர்களை தாக்கியதால் தான் என்கவுண்டர் செய்யப்பட்டது என்பது தவறானது. சரியாக விசாரணை செய்து இருக்க வேண்டும். பாதுகாக்க வேண்டியவர்களே பாதுகாக்க தவறி விட்டார்கள் நடிகை ரோகினி. பாலியல் குற்றங்களில் விசாரணை என்பது தாமதப்படுத்தக் கூடாது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திலும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். குடியுரிமை என்பதில் பாகுபாடு இருக்கக்கூடாது மதத்தின் அடிப்படையில் தள்ளி வைக்க கூடாது நடிகை ரோகிணி. நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு அரசியலில் அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது அதேபோன்று நடிகர்களுக்கும் உள்ளது
ரஜினி கமல் முதல்வர்கள் வேட்பாளர்களாக வந்தால் இருவரையும் வரவேற்பேன் இருவரும் இணைந்தாலும் தனியாக வந்தாலும் வரவேற்பேன். மக்களுடைய பிரச்சினைகளை தெரிந்த தலைவர்கள்தான் முதல்வராக வரவேண்டும் என்பது என் கருத்து என நடிகை ரோகினி சாத்தூரில் பேட்டி.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.