ETV Bharat / state

கடன் பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்! - விருதுநகர் ஆட்சியர் அலுவலகம்

விருதுநகர்: கடன் பிரச்னையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற நபர்
தற்கொலைக்கு முயன்ற நபர்
author img

By

Published : Jan 12, 2021, 7:52 AM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், கணேசன். இவர் சொந்தமாக அச்சகம் நடத்தி வருகிறார். தனது தொழில் முன்னேற்றத்திற்காக நிதி நிறுவனம் மற்றும் தனது உறவினர்களிடம் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியுள்ளார்.

வாங்கிய கடனை சிறிது சிறிதாக மாதமாதம் அடைத்து வந்துள்ளார். இந்நிலையில், 2020 ஜனவரி மாதம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு, அவருக்குத் தோள்பட்டை விலகியது. இதனால், மூன்று மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து ஓய்வுபெற்று வந்தார்.

பின்பு கரோனா காலகட்டத்தில் ஊரடங்கினால் கணேசனுக்கு தொழிலில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடனை கட்டுவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடன் வாங்கியிருந்த நிதி நிறுவனத்தினரும் உறவினர்களும் அவ்வப்போது வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற நபர்

இதனால், மன உளைச்சலில் இருந்த கணேசன் நேற்று (ஜன.11) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு மண்ணெண்ணெயுடன் சென்று தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பிற்காக இருந்த காவல் துறையினர் விரைந்து வந்து கணேசனை மீட்டனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் கணேசனிடம் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் பெண் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.