விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மாவட்டத்தில் முன்னதாகவே நான்காயிரத்து 287 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டு மருத்துவர்கள் உள்பட 480 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் நான்காயிரத்து 767 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இரண்டாயிரத்து 493 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள இரண்டாயிரத்து 237 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தொற்று காரணமாக மாவட்டத்தில் இன்று மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.