கரோனா வைரசின் பாதிப்பால் தமிழக அரசு இன்று மாலை முதல் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் விருதுநகா், சாத்துார் உள்ளிட்ட உழவர் சந்தைதளில் காய்கறிகளின் விலை அகிகரித்துள்ளது. சாத்துாரில் அண்ணா காய்கறி சந்தை உள்ளது. வியாபாரிகள் பொதுமக்கள் என பலர் சந்தைகளைப் பயன்படுத்தி வரும் நிலையில், 144 தடை உத்தராவால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் சந்தை மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதால், இதைப் பயன்படுத்தி கடை வியாபாரிகள் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
இதையும் படிக்க: 144 தடை எதிரொலி: மதுபான கடையில் குவிந்த குடிமகன்கள்